Krishna :The Supreme Personality of Godhead (Tamil)

299.00

SKU KR-TAM-01 Category Tag

Description

மேல் நாட்டில் யாரேனும் கிருஷ்ணரைப் பற்றி கேள்விப்பட்டதில்லை என்பது பெரும் ஆச்சரியம். போ ஒவ்வொரு கலாசாரத்திலும் அவரவர் போற்றிப் பேணும் பழங்கதைகளும், வீரதீரர்களும், தேவதூதர்களும், கடவுளரும் உள்ளனர். ஆனால், கிருஷ்ணர் நம் சிற்றறிவுக்குட்பட்ட கலாசார வேறுபாடுகளையெல்லாம் கடந்து நிற்பவர். கிருஷ்ணரைப் பற்றிய அறிவு கலாசார எல்லைகளுக்கு அப்பாற்பட்டது, பரமானது, எல்லாவற்றையும் உள்ளடக்கியது, எல்லாவற்றையும் ஆகர்ஷிக்கவல்லது. கிருஷ்ணர் என்பவர் இந்து சமய வரலாற்றைச் சார்ந்த ஒரு கவி அல்லது மதவாதியின் வளமிக்க கற்பனையில் உதித்த ஒரு தோற்றமல்லர். மாறாக கிருஷ்ணர் பரம சத்தியமானவர், காரணங்களுக்கெல்லாம் காரணமானவர், எல்லாவற்றிற்கும் மேலாக பரம் பொருளான புருஷோத்தமன்.
1
.
பரம்பொருள் ஒரு வியக்தியா?
யூத கிறிஸ்துவ மதத்தின் ஒரு கடவுள் தத்துவம் கற்பிக்கும் கோபக்கார தாடிக்கிழவனான கடவுளிடமிருந்து தப்பிக்க முயலும் மேலைநாட்டவனுக்கு இக்கேள்வி பொருத்தமற்றதாகப்படலாம். ஆனால் புருஷோத்தமனான முழுமுதற் கடவுளாகிய ஸ்ரீ கிருஷ்ணர் அப்படிப்பட்டவரல்லர். அவர் ஆனந்தமயமான, நித்தியமான, பரமான இளைஞர். அவரது அமோகமான உடல் அழகும், உன்னதமான தன்னியல்புகளும், சிறப்பான லீலைகளும், அவரை உணர்ந்தறியும் நல்வாய்ப்பைப் பெறுபவர்களுக்கு பக்திமயமான பேரானந்தத்தையும் தெய்வீகக் களிப்பையும் தரவல்லவை. – – புரதான மற்றும் மத்திய கால இந்தியாவைச் சார்ந்த வேதங்களும் வேத இலக்கியங்களும் கிருஷ்ணரையும் இறுதியாக, எல்லா பௌதிக மற்றும் தத்துவ சாஸ்திரங்களையும் நாம் அறிய உதவும் மூல நூல்களாகும். ஆதி வேத நூல்கள் அனைத்தையும் தெய்வீக முனிவரான வியாசதேவரே இயற்றினாரென்று வேத சரித்திர பரம்பரை கூறுகிறது. மகாபண்டிதரானஅம்முனிவர் வேத ஞானத்தைத் தொகுத்தெழுதும் மகத்தான பணினா.. நிறைவேற்றிய பின்னரும் தம்முள் விவரிக்க இயலாத ஏதோவொன் அதிருப்தி நிலவுவதை உணர்ந்தாரென்று வேத நூல் வரலாறுகள் உரைக்கின்றன. இவ்வாறு வியாசமுனிவர் சஞ்சலமடைந்திருந்த போதும் அவரது ஆன்மீக குருவான புகழ்மிக்க நாரத முனி வியாசரின் துக்கத்திற்கான அடிப்படைக் காரணத்தை விளக்கினார். இகலோக மற்றும் ஆன்மீக முன்னேற்றத்திற்கான பல வழிமுறைகளை விரிவாகத் தெளிவுப்படுத்தி விளக்கிக் கூறிய வியாசர் ஆன்மீகத் தேடலின் இறுதி லட்சியம் புருஷோத்தமனெனும் முழுமுதற் கடவுளான ஸ்ரீ கிருஷ்ணரிடம் புனிதமான பக்தி செலுத்துதல் என்பதை எடுத்துரைக்கத் தவறிவிட்டார். கிருஷ்ணரின் உன்னதமானதும் பரமானதுமான தன்மைகளையும் லீலைகளையும் பற்றிக் கேட்பது கிருஷ்ண பக்தி வளர்வதற்கு வித்திடும் என்பதால் முழுவதும் கிருஷ்ணரைப் பற்றியதான ஒரு இலக்கியத்தைப் படைக்கும்படி நாரதர் வியாசருக்குப் பரிந்துரைத்தார். கார் கேகற்பமாம் பல AR iபாக்க
கலக்க Eurse(பேருக காயாம் “அறிவு பெறுவதன் முழுமையான நோக்கம் பிரபுவின் பரமான வாமனாக வரம்
தா தன்மைகளை வர்ணிப்பதில் நிறைவு பெறுகிறதென்ற தீர்மானமான முடிவிற்கு அறிஞர்கள் வந்துள்ளார்கள். மர் எனவே, எல்லாம் வல்ல பிரபுவின் லீலைகளைப் பற்றி வேதங்களிலிருந்து விரிவாகத் தெரிந்துள்ள ப்பக்கம் பாகமாயல்பாக
தாங்கள் அவற்றை வர்ணித்து கரகரப்பகயை கேடு sெ எழுத வேண்டும். அவ்வாறு நீங்கள் பாடிய பால் tone செய்தால் கற்றறிந்த மகான்கள் ranaureகம் மால்யவாய்கை தன் பலரின் விருப்பத்தைத் திருப்திப் கோலம் டேங்குக பல படுத்துவதுடன், ஜடச் சிக்கல்களில் saras preates
அகப்பட்டு அவதிப்படும் பெருவாரியான பக்க காயம் பக்காக மக்களின் துயரங்களையும் காபக்டேdia EP த துடைத்தவர்களாவீர்கள்.”

Additional information

Weight 0.800 kg
Dimensions 22 × 13.5 × 4.5 cm

Reviews

There are no reviews yet.

Be the first to review “Krishna :The Supreme Personality of Godhead (Tamil)”

Your email address will not be published. Required fields are marked *

×